மூல பாவம்
ஆவியானவரின் சத்தம்

வெளி. 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட் சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்
“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்." ஆயிரக்கணக்கானோர் இவைகளைப் படித்திருப்பர். அல்லது படிக்கக் கேட்டிருப்பர். எத்தனை பேர் அவைகளை ஏற்றுக்கொண்டார்களென்பதை நாம் அறியோம். சத்தியத்தை அறிய வேண்டுமென்ற வாஞ்சை கொண்டு வசனத் தைக் கேட்பவனுக்குப் பரிசுத்த ஆவியானவர் அதன் அர்த்தத்தை விளக்கிக் கொடுப்பார். வார்த்தையின் அர்த்தத்தை வெளிப் படுத்துவது பரிசுத்த ஆவியானவரே. நாம் சத்தியத்தை எவ்வள வாய்ப் போதித்தாலும், ஒருவன் அதைக் கேட்கத் தன் செவியைத் திறந்து, அவன் இருதயத்தில் அதை ஏற்றுக் கொள்ளாவிடில், அவனுக்கு அதன் அந்த்தம் வெளிப்படாது.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறார் என்று இந்த வாக்கியம் பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. வேதாகமத்தின் முதலாம் புத்தகமாகிய ஆதியாகமத்தில் சொல்லப்பட்டவை, வேதாகமத்திலடங்கிய மற்ற வார்த்தைகளின் மூலம் உறுதிப் படுத்தப்பட்டு, கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிவடைகிறது போன்று, முதலாம் சபையாகிய எபேசு சபைக்கு ஆவியானவர் கொடுக்கும், சாத்தியம் ஜீவ ஊற்று, நித்தியமானவர். ஜீவவிருட்சம். ஏதேன் தோட்டத்தின் மத்தியில் இருந்தது போல, தேவனுடைய பரதீசின் மத்தியிலும் அவர் இருப்பார்.
ஏதேன் தோட்டத்தின் மத்தியிலிருந்த இவை மரங்களே என்று சிலர் வாதிப்பதுண்டு. ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள். இவை மரங்களைக் குறிப்பிடுவதில்லை என்று அறிவார்கள். "கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது" (லூக்கா 3:9) என்று யோவான் ஸ்நானன் வனாந்தரத்தில் பிரசங்கித்த போது. அவன் இயற்கையில் காணப்படும் மரங்களைக் குறிக்காமல், மக்களையே குறிப்பிட்டான். "தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிற தென்பதே அந்தச் சாட்சியாம்". (யோவான் 5:11) என்று யோவான் கூறுகிறான். "உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை" (யோவான் 5:40) என்று இயேசு யூதர்களிடம் கூறுகிறார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (யோவான் 5:12). வேதத்தில் எழுதப்பட்டவைகள் ஒருக்காலும் மாறுவதில்லை. அவைகளோடு நாம் ஒன்றையும் கூட்டவோ, அல்லது குறைக்கவோ கூடாது. குமாரனில் ஜீவன் உண்டு என்பதை வேதம் வெளிப்படை யாக அறிவிக்கிறது. அப்படியெனில் ஏதேன் தோட்டத்தில் காணப்பட்ட ஜீவவிருட்சம் இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும். 'ஜீவ்விருட்சம் ஒரு ஆளைக் குறிப்பிட்டால். நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் ஒரு ஆளைக் குறிப்பிட வேண்டும். அது தான் சாத்தான். அவ்வாறாயின், நீதிமானாகிய இயேசுவும் பொல்லாங்கனாகிய சாத்தானும் ஏதேன் தோட்டத்தின் மத்தியில் அடுத் தடுத்து நின்றனர். "நீ (சாத்தான்) தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன். (எசே . 28:13).
'சர்ப்பத்தின் வித்து' பற்றிய சரியான வெளிப்பாட்டை நாம் இங்குதான் பெறுகிறோம். ஏதேன் தோட்டத்தில் உண்மையாக என்ன சம்பவித்தது என்று நாம் சிந்திப்போம். சர்ப்பம் ஏவாளை வஞ்சித்ததாக வேதம் கூறுகிறது. ஏவாள் சர்ப்பத்தினால் கற்பழிக்கப்பட்டாள். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது." (ஆதி. 3:1) என்று ஆதியாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மிருகத்தின் (சர்ப்பத்தின்) சுபாவம் மனிதனுடைய சுபாவத்திற்கு ஒத்ததாயிருந் தது. மனிதனைப் போல் நன்கு ஆலோசிக்கவும், பேசவும் அதனால் முடிந்தது. மனிதக் குரங்குக்கும் (Chimpanzee) மனிதனுக்கும் அப்போஸ்தலருடைய நடபடி களில் குறிக்கப்பட்டிருக்கும் சத்தியம்) லவோதிக்கேயா சபையின் காலம் முடியும் வரையுள்ள காலத்திற்கு அளிக்கப்பட்ட சத்திய மாகும். ஒவ்வொரு சபையின் காலமும் மிகுந்த கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் முதல் சபையில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள், காலங்கள் தோறும் வளர்ந்து, லவோதிக்கேயா சபையின் காலத்தில் பெரிய மரமாகும். ஒவ்வொரு காலத்திற்குரிய உண்மை யான விசுவாசிகளையும் ஆவியானவர் எச்சரிக்கிறார். கேட்கிறதற்குக் காதுள்ளவன் மாத்திரமே கேட்பான்.
வாக்குத்தத்தம்
வெளி. 2:7 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவ னுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்", ஆம். யுத்தம் ஓய்ந்து கடைசி எக்காளம் தொனித்த பிறகு, நம்முடைய ஆயுதங்களை நாம் கீழே வைத்துவிட்டு, தேவனுடைய பரதீசில் இளைப்பாறி, ஜீவவிருட்சத்தில் எப்பொழுதும் பங்கு கொள்வோம்.
'ஜீவவிருட்சம்' என்னும் வாக்கு ஆதியாகமத்தில் மூன்று முறை யும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று முறையும் உபயோகப் படுத்தப்பட்டு எல்லா இடங்களிலும் ஒரே அர்த்தத்தையே வெளிப் படுத்துகிறது.
'ஜீவவிருட்சம்' என்பது எதைக் குறிக்கிறது? பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள்" (எண். 24:6) என்று வர்ணித்தான். வேதத்தில் விருட்சங்கள் ஆட்களையே குறிக்கின்றன. முதலாம் சங்கீதத்தில், கர்த்தருக்குப் பிரிய மானவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பிடப் படுகிறான். அப்படியெனில் ஜீவவிருட்சம், ஜீவனைக் கொடுக்கும் இயேசுகிறிஸ்துவையே குறிக்க வேண்டும்.
ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஜீவவிருட்சமும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் நடப்பட்டிருந்தன. ஜீவவிருட்சத் தினால் மனிதன் வாழவேண்டுமென்றும், மற்ற விருட்சத்தில் பங்கு கொள்ளும் நாளில் அவன் சாக வேண்டும் என்னும் கட்டளை அங்கு பிறந்தது. மனிதன் கட்டளையை மீறினபோது, மரணம் பாவத்தின் மூலம் பிரவேசித்து, தேவனிடத்திலிருந்து அவனைப் பிரித்தது.
ஏதேன் தோட்டத்தில் காணப்பட்ட ஜீவவிருட்சம் இயேசுவே. இயேசு தம்மை நித்திய ஜீவனின் மூலாதாரமாகக் (Source) கருதினார். "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.' (யோவான் 6:51). "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.' (யோவான் 8:58). "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் .- (யோவான் 4:14). அவரே ஜீவ அப்பம், இடையேயுள்ள உருவத்தைப் பெற்று. நிமிர்ந்து நடக்கும் மிருகமாக அது இருந்தது. மனிதனுடைய உருவமைப்போடு ஒற்றுமை அதிக மிருந்ததால், அதன் வித்து ஸ்திரீயின் வித்தோடு கலக்கவும் அதனால் ஸ்திரீ கர்ப்பிணியாகவும் சாத்தியமாயிருந்தது. இவ்வாறு ஏவாள் கற்பழிக்கப்பட்ட போது, தேவன் சர்ப்பத்தைச் சபித்தார். சர்ப்பத் தின் தேகத்திலுள்ள ஒவ்வொரு எலும்பையும் அவர் மாற்றினதால் அது பாம்பைப் போல ஊர்ந்து போக வேண்டியதாயிற்று. மனிதன் ஞானமுள்ளவனானதால், மிருகத்திற்கும் மனிதனுக்குமுள்ள தொடர் பைக் கண்டுபிடிக்க அவனால் முடிந்தது. குரங்கிலிருந்து மனிதன் உண்டானான் என்னும் தத்துவத்தை (Theory of Evolution) நிரூபிக்க அவன் முயல்கிறான். ஆனால் மனிதனுக்கும் குரங்குக்கும் இடையே யுள்ள இணைப்பை (Missing link) அவன் ஒரு போதும் கண்டுபிடிக்க இயலாதபடி தேவன் செய்துவிட்டார். குரங்கிலிருந்து மனிதன் உண்டாகவில்லை. ஆனால் மிருகம் மனிதனோடு கலந்தது. ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் இத்தனைக் காலமாக மறைவாயிருந்து. இப்பொழுது அது நமக்கு வெளிப்படுகிறது. இதன்மூலம் ஏவாள் ஜீவனைப் புறக்கணித்து மரணத்தை ஏற்றாள்.
ஏதேன் தோட்டத்தில் தேவன் சர்ப்பத்தினிடத்தில் கூறியதைக் கவனியுங்கள். உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதி 3:15). இவ்வாக்கின் மூலம் ஸ்திரீக்கு வித்துண்டு என்று நாமறிவோமானால், சர்ப்பத்திற்கும் வித்துண்டு என்பதை நாம் ஆமோதிக்க வேண்டும். ஸ்திரீயின் வித்து, மனிதப் புணர்ச்சியின்றி தோன்றிய ஆண்குழந்தையா யிருப்பின், சர்ப்பத்தின் வித்தும் மனிதனின் சம்பந்தமின்றி தோன்றிய ஒரு ஆண் குழந்தையாயிருக்க வேண்டும். ஸ்திரீயின் வித்து, ஆண் பெண் தொடர்பின்றி பரிசுத்த ஆவியினால் உண்டாக்கப்பட்ட கிறிஸ்து என்று யாவருமே அறிந்த ஓர் உண்மை. ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார் என்று தேவன் கொடுத்த வாக்குத்தத்தத் தைக் கிறிஸ்து சிலுவையின் மரணத்தினால் சாத்தானைத் தோற்கடித்து, நிறைவேற்றினார். சிலுவையில் சாத் தானின் தலை நசுக்கப்பட்டது. சாத்தானும் இயேசுவின் குதிங்காலை நசுக்கினான்.
ஸ்திரீயின் வித்து, மனிதனின் தொடர்பின்றி, எவ்வாறு மனித ரூபத்தில் தோன்றியது என்பதை வேதம் விவரிக்கிறது. "ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான், அந்தக் கன்னி கையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து, கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே : நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடி விராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்" (லூக்கா 1:26-35). இதே வசனங்கள் சர்ப்பத்தின் வித்து எவ்வாறு இவ்வுல கத்தில் தோன்றியது என்னும் வெளிப்பாட்டையும் கொடுக்கின்றன.
'ஸ்திரீயின் வித்து என்பது தேவன் தமக்கு மனித ரூபத்தை உண்டாக்கிக் கொண்டதைக் குறிக்கிறதென்று மேற்கூறிய வசனங் கள் மூலம் அறியலாம். அவ்விதமாகவே சர்ப்பத்தின் வித்து' சாத்தான் மானிட வர்க்கத்தில் நுழைந்த விதத்தைக் குறிக்கிறது. சாத்தான் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட ஆவியாயிருப்பதால், தேவனைப் போன்று தனக்கென ஒரு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டு மனிதரிடையே வெளிப்பட முடியாது. ஆகையால் மானிட வர்க்கத்தோடு அவன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், எவ்வகை யிலாகிலும் தன்னுடைய வித்தை மனிதரில் நுழைக்க வேண்டும். இவ்வாறு அவன் செய்து வெற்றி பெற்ற சம்பவத்தைத்தான் ஆதியாகமம் எடுத்துரைக்கிறது. சாத்தானைச் 'சர்ப்பம்' என்று வேதம் அழைக்கிறது. 'சர்ப்பத்தின் வித்து' மானிட வர்க்கத்தில் நுழைந்ததெனில், சாத்தானின் வித்து மனிதரில் நுழைந்ததென அர்த்த ம்.
ஆதாம் ஏவாளை அறியும் முன்பு சர்ப்பம் அவளை அறிந்தது. அதன் மூலம் தோன்றியவனே காயீன். காயீன் பொல்லாங்கனால் உண்டானான் என்று யோவான் கூறுகிறான். (1 யோவான் 3:12). காயீன், ஆதாமின் குமாரனாயிருந்தால், ஆதாம் பொல்லாங்கனாயிருக்க வேண்டும். அப்படியெனில் வேதம் அவனை எங்ஙனம் 'தேவனால் உண்டானவன்' (லூக்கா 3:38) என்று கூற முடியும்? வேத வாக்கியங்களை அருளிய பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு முரண்பாடான சத்தியங்களை ஒருக்காலும் கொடுக்க மாட்டார். ஆகையால் காயீன் பொல்லாங்கனான சாத்தானின் மூலம் இவ்வுலகத்தில் தோன்றினான். தன் தகப்பனின் சுபாவத்தைப் பெற்று. அவன் கொலையாளியானான், சாத்தான் தேவனை எதிர்த்ததைக் காட்டிலும், அவனுடைய குமாரனாகிய காயீன், மனித சுபாவ மற்று, தேவனோடு அதிகமாக எதிர்த்துப் போராடினான். "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப் பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ" என்றான். அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி : எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக் முடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்தி விடுகிறீர், நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து. பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன், என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்று போடுவானே என்றான். (ஆதி. 4:5.9.13. 14). |
காயீன், ஆபேல், சேத் இவர்கள் பிறந்தவிதம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. "ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோ தரனாகிய ஆபேலைப் பெற்றாள் " (ஆதி 4:1-2).
"பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான், அவள் ஒரு குமாரனைப் பெற்று ... அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்" (ஆதி. 4:25. ஆதாமின் இரு புணர்ச்சிகளின் காரணமாய் மூன்று குமாரர்கள் பிறக்கின்றனர். தேவனின் சத்தியமான வார்த்தைகளே வேதத்தில் அடங்கியிருப்பதால், மேற்கூறியது தவறாக எழுதப் பட்டிருக்கிறது என்று கூற முடியாது. இதன் அர்த்தத்தை ஆவியானவர் பின்னர் வெளிப்படுத்த வேண்டும் என்னும் நோக் கத்தோடு அவ்விதமாக குறிக்கப்பட்டிருக்கிறது. ஆதாமின் இரு செய்கைகளினால் மூன்று குமாரர்கள் பிறந்தால், ஒருவன் ஆதாமின் குமாரனல்ல. உண்மை என்னவெனில், சர்ப்பத்தின் குமாரனும் (காயீன்), ஆதாமின் குமாரனும் (ஆபேல்) இரட்டைக் குழந்தைகளாக ஏவாளின் கர்ப்பத்தில் வளர்ந்தனர். ஆபேல் உண்டாவதற்கு சிறிது காலம் முன்பு காயீன் ஏவாளின் கர்ப்பத்தில் உண்டானான். இது சாத்தியமல்ல என்று எண்ணுபவர்கள், மருத்துவக் குறிப்புகளை (medical reports) படிக்க ண்ேடும். சமீபத்தில் நார்வே (Norway) தேசத்திலிருந்த ஒரு ஸ்திரீ, இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித் தாள். அவைகளில் ஒன்று கறுப்பு நிறமாகவும், மற்றொன்று சிவப் பாகவும் இருந்தன. அவளுடைய நடத்தையைச் சந்தேகித்த கணவன் அவளை விவாகரத்து செய்தான். அவளுக்கு ஒரு நீக்ரோ காதலனிருந்ததாக அவள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டாள். ஒரு கர்ப்பம் உண்டான மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கர்ப்பம் அவளுக்கு உண்டாயிற்று என மருத்துவர் கூறினர். 1963ம் வருஷத்தில் டெக்ஸாஸ் (Texas) பட்டினத்திலுள்ள போமாண்ட் (Beumont) என்னும் ஸ்தலத்தில் தங்கியிருந்த ஒரு பெண் இரண்டு வித்தி யாசமான சமயங்களில் கர்ப்பமுற்றாள். முதல் பிரசவத்தில், மற்றொரு குழந்தை கர்ப்பத்திலுள்ளவாறே மரித்தாள்.
சர்ப்பத்தின் வித்து ஏன் இம்முறையில் தோன்ற வேண்டும்? மனிதன் தேவனுக்கென்று சிருஷ்டிக்கப்பட்டவன். அவன் தேவ னுடைய (பரிசுத்த ஆவியின்) இளைப்பாறுதலின் ஸ்தலமாக, அதாவது ஆலயமாக, இருக்கிறான். "இவன் (தாவீது) தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான். சாலொ மோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமான வர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக் கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது? இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வணங்காக் கழுத்துள்ள வர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாத வர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். (அப்.7:46-51).
கர்த்தர் மனிதனுக்குள் தங்குவது போன்று. சாத்தானும் தங்க ஆசைக் கொண்டான். ஆனால் இவ்வாறு தங்குவதற்குக் கர்த்தருக்கு மாத்திரமே உரிமை இருந்தது. கர்த்தர் தமது சிருஷ்டிப்பின் வல்லமையினால் மரியாளின் கர்ப்பத்தில் சரீரத்தை உண்டாக்கிக் கொண்டு மானிடரிடையே வாசம் செய்தார். சாத் தானுக்கு ஏவாளின் கர்ப்பத்தில் சரீரத்தை உண்டாக்கிக் கொள்ள வல்லமையில்லை. ஆயினும் மானிட வர்க்கத்தோடு சம்பந்தங் கொள்ள ஆர்வம் கொண்டவனாய் கதரேனருடைய நாட்டில் பன்றிகளுக்குள்ளே புகுந்தது போன்று (லூக். 8:33), ஏதேன் தோட்டத்திலுள்ள நிமிர்ந்து நின்ற சர்ப்பத்திற்குள் அவன் புகுந்து. ஏவாளைக் கற்பழித்து, அவள் மூலம் காயீனைப் பெற்றான். காயீன் சாத்தானின் ஆவிக்குரிய தன்மைகளையும் மிருகத்தின் மாம்ச இச்சைகளையும் ஒருங்கே கொண்டவனாயிருந்தான்.
ஒரு மிருகத்தின் கருவை எடுத்து மனிதனுள் புகுத்தினால், அதன் தைராய்டு அணுக்கள் (Thyroid cells) மனிதனின் தைராய்டுக்குள்ளும். அதன் பிருக்கங்களின் அணுக்கள் (kidney cells) மனிதனின் பிருக்கங்களுக்குள்ளும் செல்கின்றன என்று விஞ் ஞானம் கண்டுபிடித்துள்ளது. காணக்கூடாத ஒரு சக்தி இவை களைச் சரியான இடங்களில் சேர்க்கின்றது. இக்காலத்தில் மனிதனும் மிருகமும் புணர்ந்து சந்ததியுண்டாக்க முடியாவிட் டாலும், மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே காணப்படும் இத் தகைய ரசாயனத் தொடர்பு (chemical affinity) ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்கும் சர்ப்பத்திற்குமுண்டான புணர்ச்சியை நிரூபிக்கிறது.
மேற்கூறிய எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தி மறுபடியும் கூற நான் விரும்புகிறேன். ஏதேன் தோட்டத்தில் இரண்டு விருட்சங்கள் உண்டாயிருந்தன. இயேசுவே ஜீவ விருட்சம், மற்ற விருட்சம் சாத்தான் என்பதை அவன் கொடுத்த கனிகளின் மூலம் அறியலாம். இவ்விரண்டு விருட்சங்களும் மனிதனுடைய ஜீவியத்தோடு சம்பந்தப்பட்டவையென்றும் தேவனுடைய மேலான திட்டமும் (sovereign plan) நோக்கமும் நிறைவேற இவையிரண்டும் காரணமாயிருந்தன என்றும் நாமறிய வேண்டும். இச்சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ளாவிடில் தேவனின் சகலத்தையும் அறியும் தன்மையை (omniscience) நாம் சந்தேகிக்கிறவர்களாயிருப் போம். தேவன் தம்முடைய நித்திய ஜீவனை மனிதனுக்குப் பகிர்ந்து கொடுக்க உலகத் தோற்றத்திற்கு முன்பே சித்தங் கொண்டார் என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. "தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமா யிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக் குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக் கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப் பண்ணினார். காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மா னித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்க ளுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கை யாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும் படிக்கு. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லா வற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்" (எபே. 1:4-12). "உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்கு வார்கள். (வெளி. 13:8). தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதன் மூலமேயன்றி, வேறு எந்த வகையிலும் மனிதன் அவருடைய நித்திய ஜீவனைப் பகிர்ந்து கொள்ள முடியாது. இது தேவனின் நித்திய நோக்கத்தின் ஒரு பாகமும் முன் குறிக்கப்பட்டதும், (predestinated) அவருடைய இரட்சிப்பின் மகிமைக்குப் புகழ்ச்சியுமாயிருந்தது. இதுவே அவருடைய மீட்பின் திட்டம். தேவன், தம்முடைய இரட்சிப்பின் தன்மையை வெளிப்படுத்துவதற்கென்று, இரட்சிப்பு அவசிய மான ஒரு மனிதனை முன் குறிக்க வேண்டியதாயிருந்தது. இரட் சிப்பை அடைவதன் மூலம், மனிதன் விவேகத்தைப் பெற்று, அவன் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தையும் அறிந்து கொள்வான். ஆயிரக் கணக்கான வேதவாக்கியங்களும், முக்கியமாக சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக ஆமென் (ரோமர் 11:36) என்னும் வசனமும், அதை ருசுப்படுத்துகின்றன. மனிதன் நேரடியாக ஏதேன் தோட்டத்தின் மத்தியிலிருந்து ஜீவ விருட்சத்தில் பங்கு கொள்ளுதல் அரிது, நித்திய ஜீவவிருட்சம் முதலில் மானிடனாக வேண்டும். தேவன் மனிதனை பாவத்தினின்று இரட்சிக்க வேண்டுமெனில், அதற்குப் பாவத்தில் விழுந்த மனிதன் அவசியம். சாத்தான் மாத்திரம் மாமிச இச்சைகளைக் கொண்டு மனிதனை பாவத்தில் வீழ்த்த முடியும். பாவத்தில் விழுந்த மனிதனை இரட்சிக்க கிறிஸ்து மாமிசத்தில் தோன்றிய வண்ணம், சாத்தான் மாம்சத்தில் தோன்ற வேண்டும். ஆனால் கிறிஸ்துவைப் போல் அவனுக்கென்று சரீரத்தைச் சிருஷ்டித்துக் கொள்ள அவனால் முடியாது. ஆகையால் பெரும்பாலும் மனித உருவமைப்பைப் பெற்ற சர்ப்பத்தின் மூலம், அவன் தன்னுடைய வித்தை மானிட வம்சத்தில் புகுத்தினான். (இயேசுவும் பரிசுத்த ஆவியாக மக்களுக் குள் நுழைந்திருக்கிறார். இவர்கள் உயிர்த்தெழுதலில் மகிமையின் சரீரங்களைப் பெறுவர்.) ஏதேன் தோட்டத்தில் தேவன் இவ்விதமாகத்தாம் முன்குறித்த திட்டத்தை நிறைவேற்றினார். தேவனுடைய நோக்கம் நிறைவேற சாத்தான் அனைத்தையும் செய்த பிறகு. தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தை மனிதன் அடைய முடியாமற் போயிற்று. மனிதன் நித்திய ஜீவனையடைய கர்த்தரின் பார்வையில் அது ஏற்ற சமயமல்ல. மிருகம் மனிதனைப் பாவத்தில் ஆழ்த்தியதன் காரணத்தால், ஒரு மிருகத்தின் இரத்தம் சிந்தப்படுவதன் மூலம், தேவன் மறுபடியும் மனிதனோடு தொடர்பு கொண்டார். ஒரு நாளில் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, சிலுவையின் மரண பரியந்தம் அவரைத் தாழ்த்தினார். அதனால் மானிடர் அழிவினின்று மீட்கப்பட்டு, அவருடைய நித்திய ஜீவனில் பங்கு கொண்டனர். இவ்விளக்கம் சர்ப்பத்தின் வித்தின் இரகசியத்தை உங்களுக்கு அறிவித்து ஏவாள் பழத்தைப் புசிக்கவில்லை என்பதைப் போதிக் கும்.
"ஏவாள் பாவத்தில் விழுந்தால், ஆதாமைத் தேவன் ஏன் குற்றப்படுத்த வேண்டும்?" என்று அநேகர் என்னிடத்தில் கேட்கின் றனர். தேவனுடைய பிரமாணங்களும். சட்ட திட்டங்களும் (வார்த்தை ) ஒருக்காலும் மாறாதவைகள். இவைகள் உலகங்கள் உண்டாவதற்கு முன்பே நியமிக்கப்பட்டு, அநேக காலங் கழித்து மோசேக்குக் கொடுக்கப்பட்டு, வேதாகமத்தில் இடம் பெற்றன. ஆதாமும் இப்பிரமாணங்களுக்குட்பட்டவனாயிருந்தான். ஒரு ஸ்திரீ புருஷனை விட்டுப் பிரிந்து, வேறொருவனோடு வாழத் தலைப்பட்டால், அவள் விபச்சாரி என்றும், புருஷன் அவளை மறுபடியும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் வேதம் போதிக்கிறது. ஏவாளை ஏற்றுக் கொண்டால் தேவனுடைய கற்பனையை மீறுவான் என்று அறிந்தும், ஆதாம் அவளைச் சேர்த்துக் கொண்டான். ஏவாள், ஆதாமின் ஒரு பாகமாயிருந்ததால், அவள் செய்த பாவத்தை இதன் மூலம் அவனே ஏற்றுக்கொண்டான். ஆதாம் ஏவாளோடு சேர்ந்ததன் காரணமாக, அவள் கர்ப்பந்தரித்தாள். ஏவாளின் மேலுள்ள அன் பினிமித்தம், ஆதாம் மானிட வர்க்கம் முழுவதையும் பாவத்திற்கு அடிமையாக்கினான்.
ஏவாள் ஆதாமுக்கு ஆபேல், சேத் என்னும் இரு குமாரர்களைப் பெற்றாள். இவர்கள் பாவத்தினால் கறைப்படுத்தப்பட்ட மானிட வர்க்கத்தின் முன்னோர்களாவர். ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாம் தலைமுறை என்று யூதா கூறுகிறான் (யூதா 14ம் வசனம்). ஆதியாகமம் (6ம் அதிகாரம்) ஆதாமின் வம்ச வரலாற்றையும் பின்வருமாறு குறிக்கிறது. 1. ஆதாம் . 2. சேத். 3. ஏனோஸ், 4. கேனான், 5. மகலாலெயல், 6. யாரேத் . 7. ஏனோக்கு. காயீன் வம்ச வரலாற்றில் இடம் பெறவில்லை. ஆதாமின் சந்ததி சேத்தின் வழியாக வருகிறது. காயீன் ஆதாமின் குமாரனாயிருந்தால் காயீனின் வழியாகச் சந்ததி உண்டாக வேண்டும். மேலும், "ஆதாம் நூற்று முப்பது வயதான போது தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே, ஒரு குமாரனைப் பெற்று. அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்" (ஆதி. 5:3) என்று வேதம் உரைக்கிறது. காயீன் ஆதாமின் சாயலாக இருந்தான் என்று வேதாகமத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆதாமின் குமாரனா யிருந்தால், அவன் சாயலிலே காயீன் உண்டாயிருக்க வேண்டும். அதுவுமன்றி, லூக்காவில் காணும் வம்ச வரலாற்றிலும், காயீனின் பெயர் குறிக்கப்படவில்லை. "ஏனோஸ் சேத்தின் குமாரன், சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் தேவனால் உண்டானவன்" (லூக்கா 3:38) என்று எழுதப்பட்டிருக்கிறது.
காயீனின் சந்ததி கர்த்தருக்கு விரோதமானவர்களென்றும், சேத்தின் சந்ததி தேவனுக்குப் பயந்தவர்களென்றும் வேத மாணாக்கர் அறிந்திருப்பினும், இவர்கள் ஏன் முரண்பட்ட தன் மைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர்கள் இதுவரை ஆலோசிக்கவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் தேவனை விட்டுப் பின்வாங்குகிறபடியால், காயீன் ஆதாமின் குமாரனாயிருப்பின், அவன் அதிக தேவபக்தியுள்வனாயிருந்து, பின்னர் தோன்றிய ஆபேலும், சேத்தும் அவனைக் காட்டிலும் குறைந்த பக்தியுள்ள வர்களாயிருந்திருக்க வேண்டும். ஆனால் காயீனோ மனிதர் எல்லாரி லும் பொல்லாங்கானவனென்றும், தேவனையும் அவருடைய கட்டளை களையும் எதிர்த்தானென்றும் வேதத்தின் மூலம் நாமறிகிறோம்.
வேதாகமம் அவசியமில்லாமல் வார்த்தைகளை உபயோகிப்ப தில்லை. ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் அபிஷேகம் பெற்றவர்கள் அறிவர். "ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான வள்” (ஆதி 3:20) என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதாம் ஜீவனுள் ளோருக்கெல்லாம் தகப்பன் என்று வேதம் எங்கும் கூறவில்லை.
மனிதர்கள் சுயஉணர்வின்றி (unconsciously) பாம்புகளால் வசீகரிக்கப்படுகின்றனரென்றும், இது மாம்ச இச்சையோடு சம்பந்த பட்டது (Sexual) என்றும் மனோதத்துவ நிபுணர்கள் (Psychiatrists) 1963 ஆம் வருடம் மார்ச் மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்ட லைப் (life) என்றும் பத்திரிகையில் எழுதியிருக்கின்றனர். பழங்குடியினர் (tribes) இன்றைக்கும் பாம்பை மாம்ச புணர்ச்சியோடு (Sex) சம்பந்தப்படுத்தி அதை தொழுதுகொள்ளுகின்றனர் என்று கூறப்படுகிறது. படிப்பறியாத இவர்கள் ஏதேனில் நடந்த சம்பவத்தை எவ்வாறு அறிவர்? நோவாவின் காலத்து வெள்ளத்தைப் பற்றிய வரலாறு உலகம் பூராவும் அறியப்படுவது போன்று, மானிட வர்க்கம் பாவத்தில் விழுந்த சத்தியமும் எங்கும் அறியப் படுகின்றது.
சர்ப்பத்தைக் குறித்து ஏவாள் கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிடில் அது கற்பழிக்கும் என்று தேவன் ஆதியில் கூறினாரா என்று நீங்கள் கேட்கலாம். இனி நடக்கப் போவதைத் தேவன் முன்கூட்டி அறிவிக்க அவசியமில்லை. அறிவில் பங்கு கொள்ள வேண்டாம்; ஜீவனில் பங்குக்கொள்ளுங்கள் என்று தேவன் கூறினார். தேவனுடைய வார்த்தையே ஜீவன். தேவனுடைய வார்த்தை யல்லாத யாவும் மரணமே. ஏவாள் ஒரு வார்த்தையை மாத்திரம் மாற்ற அனுமதித்ததால் சாத்தான் அவளை மேற்கொள்ள முடிந்தது. நியாயப் பிரமாணத்தில் ஒன்றை மீறினவன் நியாயப் பிரமாணம் முழுவதும் மீறினவனாக எண்ண ப்படுகிறான்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் மரணத்தைப் பிறப் பித்தது. காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொன்றான். அன்று முதல் பொல்லாங்கானவர்கள் நீதிமான்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் தொடங்கினர். தீர்க்கதரிசிகளினால் கூறப்பட்ட 'மீட்பின் காலம்' (Restoration period) வரை இது நீடிக்கும்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் ஞானவான்களையும் பிரசித்தி பெற்ற மனிதர்களையும் உலகத்திற்கு அளித்தது. அவர்கள் வழிகளெல்லாம் மரண வழிகள். தேவனுடைய மக்கள் சாதாரண மானவர்கள், அவர்கள் ஆவிக்குரிய வித்து உள்ளவர்களாய் தேவன் பேரில் சார்ந்திருந்து, எளிமையான ஜீவியம் செய்து, செல்வத்தைக் காட்டிலும் சத்தியத்தை விரும்புவர். சர்ப்பத்தின் வித்து, பிரமாண்ட மான வாணிபமும், அதிகமான கண்டுபிடிப்பும் (invention) உண்டாகக் காரணமாயிருந்தது. ஆனால் இவைகளோடு மரணமும் சம்பவித்தது. கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களும் அணுகுண்டு களும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றன. சமா தான காலங்களில், அவர்களால் உண்டாக்கப்பட்ட மோட்டார் வண்டிகள் அதைக் காட்டிலும் அதிகமானவர்களைக் கொன்று போட்டன. மரணமும் அழிவும் அவர்கள் கிரியைகளின் பலனாகும்.
ஆனாலும் சர்ப்பத்தின் சந்ததி பக்தியுள்ளவர்களாய்க் காணப் படுவர். காயீனும், பிசாசும் தேவனை விசுவாசித்தது போன்று அவர்களும் தேவன் பேரில் விசுவாசமுள்ளவர்களாயிருப்பர். அவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, கோதுமைக்கதிர் களைகளோடு ஒன்றாய் வளருவது போன்று, நீதிமான்களோடு சம்பந்தப்பட்டு, நிக்கொலாய் மதத்தை உண்டாக்குவர். காயீன் ஆபேலைக் கொன்றது போல், இவர்களும் தேவனுடைய வித்தை நிர்மூலமாக்குவதற் கென்று நஞ்சை அவர்களிடையே பரப்புவர். தேவன் அவருக்குச் சொந்தமான யாரையும் இழந்து போவ தில்லை. மரணபரியந்தம் அவர்களைக் காத்து, கடைசிநாளில் அவர்களை எழுப்புவதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.
முடிவுரை
"..... ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவ னுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுப்பேன்".
பாவத்தில் விழுந்ததின் காரணமாக ஆதாமுக்குக் கிடைக் கப் பெறாத ஏதேன் தோட்டத்தின் ஜீவவிருட்சம் இப்பொழுது ஜெயங் கொள்ளுகிறவனுக்கு அளிக்கப்படுகிறது. ஜீவ விருட்சத்தைக் காவல் செய்த கேரூபினின் சுடரொளி பட்டயம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் கறைபட்ட பிறகு உறையில் போடப்பட்டது. ஆதா முக்கும் அவனுடைய சந்ததிக்கும் அளிக்கப்படாத விருட்சம் இப்பொழுது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கொடுக்கப்படும் கார ணத்தைச் சற்று சிந்திப்போம்.
மனிதன் தேவனுடைய வார்த்தைகளை அவன் ஜீவியத்தில் வெளிப்படுத்த வேண்டுமென்று தேவனுடைய சித்தமாயிருக்கிறது, ஆதாம் ஒவ்வொரு வார்த்தையின்படியும் ஜீவிக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டபோது, அவன் அவ்வாறு செய்யத் தவறினான். வரப்போகும் மகத்தான தீர்க்கதரிசிக்கு அடையாளமாயிருந்த மோசேயும் தன்னுடைய கோபத்தின் காரணத்தால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தவறினான். கர்த்தருடைய இருதயத் திற்கு ஏற்றவனான தாவீதுராஜா சோதிக்கப்பட்ட போது, விபச்சாரம் செய்து, அதன்மூலம் தேவனுடைய வார்த்தையின்படி ஜீவிக்கத் தவறினான். காலம் நிறைவேறின போது, இயேசு தோன்றினார். தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினா லும் பிழைப்பாரா என்று அறிவதற்கென, அவர் சோதிக்கப்பட்டார். அந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்று, சாத்தானை மடங் கடித்தார். தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய் ஜீவித்து எல்லாவற்றையும் மேற்கொண்டார். தேவத்துவத்தின் பரிபூரண மாகத் திகழ்ந்த இவர், தேவனுடைய குற்றமில்லாத ஆட்டுக்குட்டி யாய், குற்றமற்ற பலியாகச் செலுத்தப்பட சிலுவையின் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார், ஜீவி விருட்சத்தின் கனியை நாம் புசித்து, கிரயமில்லாமல் அருளப்பட்ட அந்த நித்திய ஜீவனின் மூலம் ஜெயங்கொண்டு, தேவனுடைய வார்த்தையை நம்முடைய ஜீவியத் தில் வெளிப்படுத்த, அவர் சிலுவையின் மரத்தில் மரணத்துக்கேது வான காயமடைந்தார்.
அவரால் முற்றிலும் ஜெயங்கொண்ட தேவபுத்திரருக்குத் தேவனுடைய பரதீசும், இயேசு கிறிஸ்துவோடு எப்போதும் ஐக்கியங் கொள்ளும் சிலாக்கியமும் கிடைக்கும். அவரைவிட்டு இவர்கள் இனி ஒருபோதும் பிரிவதில்லை. அவர் எங்கு சென்றாலும், அவருடைய மணவாட்டியும் கூடச் செல்வாள். அவருக்குள்ளதனைத்தை யும் அவளோடு அவர் பங்கிட்டுக் கொள்வார். இதுவரை மறைந்து கிடந்தவைகளெல்லாம் அவளுக்கு வெளியரங்கமாக்கப்படும். அவரிருக்கிற வண்ணமாகவே நாம் இருப்போம். ஆட்டுக்குட்டி யானவரின் இரத்தத்தினாலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியின் வசனத்தினாலும் ஜெயங் கொண்டவர்களுக்கு இவையெல்லாம் உரிமைகளாக அளிக்கப்படுகின்றன.
கோணலான பாதைகள் செவ்வையாகி, நாம் அவரோடு நித்திய காலமாய் வாழும் நாளைக் காண நாம் எவ்வளவு ஆசிக்கிறோம். அந்த நாள் சீக்கிரம் வரட்டும், நாமும் தேவனுடைய வச னத்துக்குக் கீழ்ப்படிய துரிதப்பட்டு, அவருடைய மகிமையைப் பகிர்ந்து கொள்ளத் தகுதியாகக் காணப்படுவோமாக.
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். முதலாம் சபை ஆவியானவர் சொன்னதைக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அது மனிதன் கூறினவைகளைக் கேட்டு ஏற்றுக்கொண்டது. கடைசிக் காலமாகிய இக்காலத்திலே உண்மையான மணவாட்டி எழும்பி, ஆவியின் சத்தத்திற்குக் கீழ்ப் படிவாள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த அந்தகாரத்தின் நாளில் சுத்த வசனத்தின் மூலம் வெளிச்சம் மறுபடியும் பிரகாசித்து நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிர்கொண்டழைக்கத் தக்கதாக. பெந்தெகொஸ்தேயின் வல்லமையை மீண்டும் பெறுவோம்.